மஹரகம பகுதியில், கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியின் காதலி எனக் கூறப்படும் பெண் ஒருவர் மஹரகம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இந்த பெண் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளில் கிடைத்த தகவலின்படி, சஞ்சீவவை கொலை செய்த பின்னர், துப்பாக்கிதாரி தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதற்காக குறித்த பெண்ணை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல ஒருவர் மஹரகம பகுதிக்கு வந்துள்ளார்.
அந்த நபரையும் மஹரகம பொலிசார் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேல் மாகாண தெற்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments