பாதாள உலகக் கும்பல் தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலை நடத்தப்பட்டதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்டதாக கூறப்படும் கொமாண்டோ சாலிந்த ஆகியோர் WhatsApp மூலம் தொடர்பு கொண்டிருந்தது போலீசாரால் கண்டறியப்பட்டது.
விசாரணைகளின்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, கொமாண்டோ சாலிந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம், "நீங்கள் வேலையை செய்யுங்கள். வெளியே எல்லாம் சரியாக உள்ளது. பயப்பட வேண்டாம். வேலை சமநிலையில் உள்ளது. பயமின்றி அடிக்க முடியும்" என கூறியுள்ளார்.
அதற்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவர், "உள்ளே ஏதாவது பிரச்சனையா? நான் உள்ளே இருக்கிறேன்" என பதிலளித்துள்ளார்.
அதிர்ச்சியூட்டும் நேர குறிப்புகள் காலை 9.48 மணிக்கு, கொமாண்டோ சாலிந்த, "எல்லாம் நீங்கள் துப்பாக்கி சூடு நடத்துங்கள்" எனக் கூறியுள்ளார்.
இதன் பின்னர், காலை 9.54 மணிக்கு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தொலைபேசி அழைப்பு மூலம், "அவர் உயிரிழந்துவிட்டாரா?" என வினவியுள்ளார். அதற்கு, "உயிரிழந்துவிட்டார்" என பதிலளிக்கப்பட்டது.
உணர்ச்சிபூர்வ உரையாடல்"அருமை, நீ தான் என் உயிர்" என கொமாண்டோ சாலிந்த பதிலளித்துள்ளார். இதற்கு பதிலளித்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், "என்ன அண்ணா, நீங்கள் எனக்கு உணவளித்து, ஒரு தந்தையைப் போல என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். நீங்கள் தான் என் உயிர்" என கூறியுள்ளார்.
விசாரணை தொடரும் இந்த உரையாடல்கள் வெளிவருவதுடன், போலீசார் சம்பவத்தை தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கொலை தொடர்பாக மற்ற சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
0 Comments