Hot Posts

6/recent/ticker-posts

பல்கலைக்கழக கழிப்பறையில் ரகசிய கேமரா: விரிவுரையாளர் கைது

வடமேற்கு பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமொன்று நேற்று நேர்ந்தது. அந்தப் பல்கலைக்கழகத்தின் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து பீடத்தில் பணியாற்றும் 34 வயதுடைய விரிவுரையாளர் ஒருவர், பல்கலைக்கழக கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்தியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டில் பன்னல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கேமரா, ஆண் மற்றும் பெண் விரிவுரையாளர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் முகம் கழுவும் தொட்டியின் கீழ், வெளிக்குத் தெரியாமல் ஒளிந்துபோன வகையில் பொருத்தப்பட்டிருந்தது. சந்தேகத்தை எழுப்பியது, ஒரு விரிவுரையாளர் முகம் கழுவும் பொழுது தொட்டியின் அடியில் இருந்து கறுப்பு நிற கம்பி தொங்குவதைப் பார்த்ததிலிருந்தே. அவருடைய தகவலால் உடனடியாக மேலதிக விசாரணை நடைபெற்று, இது Wifi வசதியுடன் கூடிய, மிகச் சிறிய உயர் தொழில்நுட்பக் கேமரா என கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அந்த கேமரா வீடியோக்கள் நேரடியாக வேறு இடத்தில் சேமிக்கப்படுவதும், இது ஒரு திட்டமிட்ட செயல் எனச் சுட்டிக்காட்டுகிறது. சந்தேக நபரின் மடிக்கணினி மற்றும் கைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கேமரா இருப்பது தெரியவந்ததும், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற அவரை பொலிஸார் கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பொலிஸார், அவருக்கு பிணை வழங்கக்கூடாது எனக் கோரிக்கை விடுத்தனர். அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதையும், இது தனிநபரின் உரிமைகளுக்கு கடுமையான மீறல் என்பதையும் வலியுறுத்தினர்.

நீதிபதி இந்த கோரிக்கையை ஏற்று, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். கல்வி நிறுவனங்களில் இத்தகைய சம்பவங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. மாணவர்களும், விரிவுரையாளர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில், இப்படி ஒரு நம்பிக்கைக் குன்றும் செயல் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Post a Comment

0 Comments