வவுனியா பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. திருமணமாகாத 32 வயது ஆசிரியை ஒருவருடனான தொடர்பின் காரணமாக 23 வயது பல்கலைக்கழக மாணவன் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுனியா வடக்குப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பணியாற்றி வந்த குறித்த ஆசிரியை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். அவர் அங்குள்ள வீடொன்றில் தங்கி பணியாற்றி வந்த நிலையில், யாழ்ப்பாணம் சென்று வரும் போது, யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கற்கும் வவுனியா மாணவனுடன் பஸ் பயணத்தின் போது நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பு பின்னர் நெருக்கமாகி, ஆசிரியை தற்போது ஐந்து மாத கர்ப்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாணவனைத் தன்னை திருமணம் செய்யும்படி ஆசிரியை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். மாணவனின் பெற்றோரிடமும் அவர் இதுதொடர்பாக பேசி, திருமணம் நடைபெறாவிட்டால் பொலிசாரின் உதவியை நாடுவதாகவும் எச்சரித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் மன அழுத்தமடைந்த மாணவன் கடந்த புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் உடனடியாக காப்பாற்றப்பட்டு, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு சென்ற ஆசிரியை, விடுதியிலும் வைத்தியசாலையிலும் அவர் தான் தனது கணவர் எனக் கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மாணவனின் உறவினர்கள் கடும் அதிருப்தியுடனும் கோபத்துடனும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் வவுனியா பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
0 Comments