Hot Posts

6/recent/ticker-posts

பருத்தித்துறையில் கடற்கரையில் இளங்குடும்பப் பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணம், மே 4 – பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இளங்குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

36 வயதுடைய தக்சயா தர்சன் என அடையாளம் காணப்பட்ட இவர், சக்தி கோவிலடி தும்பளை கிழக்கைச் சேர்ந்தவர் ஆவார். ஒரு பிள்ளையின் தாயான இவர், கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் மகனுடன் தும்பளையில் வசித்து வந்துள்ளார்.

சடலம் கடற்கரையில் காணப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments