யாழ்ப்பாணம்: காதல் வாழ்கையில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் ஒரு இளம் உயிரை அழித்து விட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் கொட்டகலைச் சேர்ந்த 24 வயது மாணவன், கடந்த சில நாட்களாக இரு மாணவிகளுடன் ஒரே நேரத்தில் கொண்டிருந்த காதல் உறவுகளின் பின்னணியில் ஏற்பட்ட சிக்கலால், கொக்குவிலில் உள்ள தனது மாணவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலின்படி, குறித்த மாணவன் யாழ் பல்கலை மாணவியொருவரும், மட்டக்களப்பு பல்கலை மாணவியொருவரும் காதலிப்பதாகும். இருவரும் அவரது இரட்டைக் காதலை அறிந்ததிலிருந்து முரண்பாடுகள் தொடங்கியதாகவும், கடைசியாக ஏற்பட்ட கடுமையான சண்டைக்குப் பிறகு மாணவன் மனஅழுத்தத்தில் தளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இறப்புக்கு பின் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள இரத்தம் கசியும் வரிகளை போல உணர்ச்சி மிகுந்த பதிவு ஒன்று பலரையும் நெஞ்சை உலுக்க வைக்கும் வகையில் உள்ளது. அதில் அவரது குடும்ப நிலை, தாயின் பாசம், தங்கையின் கல்வி கனவுகள், மற்றும் அவரது கனவுகள் அனைத்தும் நொறுக்கப்பட்டதை விவரிக்கின்றது.
சமூகத்தின் சிந்தனைக்குரிய சுடுகாடாக மாறும் விடுதி…
அறைகள் இடிந்து விழும் நிலையில்… சவப்பெட்டியும் அங்கே கொண்டு செல்ல முடியாத வாசல்…
மாணவன் உயிரிழந்த செய்தி உறவினர்கள், நண்பர்கள், சமூக வலைதள பயனாளர்கள் என அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த துயரமான சம்பவம், இளம் மாணவர்களுக்கு உணர்ச்சி கட்டுப்பாடும், உறவுகளில் நேர்மையும், மனநலத்தின் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்துகிறது. கல்விக்கான பயணத்தில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகாமல் பாதுகாக்க, பல்கலைக்கழகங்கள், பெற்றோர் மற்றும் சமூகமே ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
0 Comments