Hot Posts

6/recent/ticker-posts

யாழில் 13 வயதுச் சிறுமியை பணம் பெற்று பலருக்கு விற்ற பெண்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை:

வட்டுக்கோட்டை – தொல்புரம் பகுதியில் 13 மற்றும் 14 வயது சிறுமிகள் பணம் பெற்று பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இலங்கை முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் செயல்களில் முக்கிய நபர்களாக ஒருபக்கம் மரக்காலை உரிமையாளர் மற்றும் அவரது குழுவினர் இருக்கின்றனர் என்கிற புகார்கள் எழுந்துள்ளன.

கஸ்தூரி என்ற பெண், வட்டுக்கோட்டையில் 13 வயது சிறுமியை பலரிடம் பணம் வாங்கி உடன்வைத்ததைத் தலைமையாக்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, தொல்புரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மரக்காலை உரிமையாளர் சின்னத்தம்பி உள்ளிட்ட ஆறுபேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிறுமியின் முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்ப கட்டமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். சிறுமி தற்போது பாதுகாப்பு காரணமாக சிறுவர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சின்னத்தம்பி, வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இலஞ்சம் கொடுத்து கைது செய்யப்படாமலேயே தவிர்த்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. விசாரணையின் போது பொலிஸார் அவரை பிடிக்காமல், முச்சக்கரவண்டியில் அழைத்து சென்று மதுபானம் வாங்கிக் குடித்ததாகவும், வசந்தா என்ற பெண் ஊடாக 5 லட்சம் ரூபா பணம் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அலுவகத்திலும், சின்னத்தம்பியின் உறவினர் எனக் கூறப்படும் பெண் ஒருவர் பணிபுரிந்து வந்ததாகவும், அவரின் ஊடாக வழக்கில் இருந்து சின்னத்தம்பி உட்பட நால்வரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக மொத்தம் 20 இலட்சம் ரூபா வரை பணம் கைமாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும், நம்பிக்கையிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. "இவ்வாறான கொடூரங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கின்றனர்; பொலிஸாரும், மருத்துவ அதிகாரிகளும் இலஞ்சம் வாங்கி குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர்" என்ற கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்கள் மத்தியில் தற்போது எழும் கேள்வி — இதே நிகழ்வு இவர்களது குடும்பத்தினர் மீது நடந்திருந்தால், இவர்கள் இதே போல் செயல்பட்டிருக்க முடியுமா? என்பது தான்.

இந்த வழக்கை சுயலாப நோக்கத்தில் கையாளாமல், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை வழங்குவதற்காக குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுகின்றது.

Post a Comment

0 Comments