மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து, அவரையும் அவரது தாயையும் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சுவிஸ் தமிழர் ஒருவர், அயலவர்களால் பிடிபட்டு மரத்தில் கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நபர், யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்தவராகும். கடந்த இரண்டு ஆண்டுகளின் பின்னர் இதே வீட்டுக்குள் மீண்டும் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதே நபர் 2 வருடங்களுக்கு முன்பும் அதே வீட்டுக்குள் புகுந்து சண்டையிட முயற்சித்ததாகவும், அப்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டு மனநல காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
நபர், பனிக்கன்குளத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த காலத்தில் நட்பில் இருந்ததாகவும், அவருக்காக பெருமளவு பணம் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த பெண் திருமணமாகியுள்ள நிலையில், அவர் வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்துக்குப் பிறகு, அந்த நபர் மாங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 Comments