வவுனியாவில் இன்று அதிகாலை வேளையில் ஒரு மோட்டார் சைக்கிளும் காரும் தீப்பற்றிக் கொண்டதில் முற்றாக எரிந்து கருகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா குடியிருப்பினூடாக பூந்தோட்டத்திற்கு செல்லும் வயல் வெளி வீதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டும் தீப்பற்றிக் கொண்டு முற்றாக எரிந்துவிட்டது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
0 Comments