Hot Posts

6/recent/ticker-posts

யாழில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டு – பெண் வேடமணிந்த ஆண் உட்பட நால்வர் கைது!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்று (20) நடைபெற்ற ஆலய தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களிடமிருந்து சுமார் 4 பவுண் சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததை அடுத்து, கோப்பாய் பொலிஸார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நால்வரை கைது செய்துள்ளனர். இதில் பெண் வேடமணிந்த ஆண் ஒருவரும், மேலும் இரு ஆண்களும், இரு பெண்களும் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது அவர்களை போலீசார் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments