அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேக நபர், நேற்று இரவு அநுராதபுரம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவர் நேற்று கல்னேவ ஹெலபதுகம் பகுதியில் கல்னேவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினர் சந்தேக நபர் தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். விசாரணைகளில், சந்தேக நபர் தான் சிறைச்சாலையிலிருந்து பிணையில் வெளியில் வந்ததாகவும், பணம் இல்லாத காரணத்தால் களவு செய்யும் நோக்கத்துடன், வைத்தியர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் விடுதியில் வைத்தியர் மட்டுமே இருந்ததாகவும், அதைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், இந்த சந்தேக நபர் அந்தப் பகுதியில் பல வீடுகளை உடைத்து பொருட்களைக் களவெடுத்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர் நாட்டின் பிரபல குற்றவாளிகள் பட்டியலில் பெயர் உள்ள ஒருவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விரிவான விசாரணை மேற்கொண்டு, சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
0 Comments