பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான், பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துக்களை இழப்பதற்கு காரணமாக அமைந்த இளவரசி குறித்து இங்கே காண்போம்.
கத்திக்குத்து ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சைஃப் அலிகான் குணமடைந்த பின்னர் வீடு திரும்பினார்.
ஆனால், அவர் போபாலில் ரூ.15000 கோடி சொத்துக்களை இழக்கப் போகிறார் என வெளியான செய்திதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, அதற்கு காரணமானவர் அபிதா சுல்தான் என்ற இளவரசிதான். அவரைப் பற்றிய பின்னணி குறித்து இங்கே பார்ப்போம்.
போபாலின் கடைசி நவாப் ஹமீதுல்லா கானின் மூத்த மகள் அபிதா சுல்தான். இவரது தங்கை வழி பேரன்தான் சைஃப் அலி கான்.
அபிதா இளவரசியின் ஒரே மாதிரியான பிம்பத்தில் இருந்து வெகு தொலைவில் இருந்தார். தனது காலத்தின் மரபுகளை மீறி செயல்பட்டார்.
அதாவது ஒரு அரசியல் சிந்தனையாளராக இருந்த அவர், விமானங்களை ஓட்டுவது, காடுகளில் வேட்டையாடுவது போன்ற விடயங்களை துணிச்சலாக செய்தவர். அப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் பாரம்பரிய வேடங்களில் மட்டுமே இருந்தனர்.
திறமையான ராஜதந்திரியாகவும் இருந்த அபிதா, வலுவான அரசியல் நம்பிக்கைகளைக் கொண்ட பெண்ணாக இருந்தார்.
அவர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்வது என்பது தனிப்பட்ட முடிவாக இருந்தது. 1949யில் அபிதா பாகிஸ்தானுக்கு சென்றபோது இரண்டு சூட்கேஸ்களை மட்டுமே எடுத்துச் சென்றனர்.
அங்கு அவர் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கினார். ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க சிரமங்களை எதிர்கொண்ட அபிதா, இறுதியில் அந்நாட்டின் முதல் பெண் நெறிமுறை அமைச்சரானார். மேலும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் பின்னர் சிலி மற்றும் பிரேசிலுக்கும் நாட்டின் தூதராகப் பணியாற்றினார்,
1926யில் நவாப் சர்வார் அலிகானை மணந்த அவர், குறுகிய கால திருமண வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்தார்.
1932யில் தனது தந்தையுடன் இங்கிலாந்தில் நடந்த முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது உட்பட பல அனுபவங்களை, அபிதா தனது சுயசரிதையான "ஒரு கிளர்ச்சி இளவரசியின் நினைவுகள்"யில் விவரித்துள்ளார்.
தனித்துவமான, தைரியமான வாழ்க்கையை வாழ்ந்த அபிதா சுல்தான், தனது 88வது வயதில் கராச்சியில் காலமானார்.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து அபிதா சுல்தான் பாகிஸ்தான் செல்ல முடிவெடுத்ததுதான் சைஃப் அலி கான் ரூ.15000 கோடி சொத்துக்களை இழக்க காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



0 Comments